Aerobic Gymnastics (U-18 trio) and கபடி (U-17) போட்டிகளில் சாதனை!
July 24, 2026 2026-07-25 17:54Aerobic Gymnastics (U-18 trio) and கபடி (U-17) போட்டிகளில் சாதனை!
Aerobic Gymnastics (U-18 trio) and கபடி (U-17) போட்டிகளில் சாதனை!
இன்று நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் எமது பாடசாலை மாணவர்கள் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.
🏆 கபடி (U-17 ஆண்கள் பிரிவு)
🥉 3ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
🏆 Aerobic Gymnastics – மாகாண மட்டப் போட்டி Under-18 – Trio Event
🥈 2ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவான அனைத்து மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்!
தேசிய மட்டத்திலும் சிறப்பான வெற்றி பெற்று பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.
🏆 கொழும்பு இந்துக் கல்லூரியின் மேலும் ஓர் பெருமைமிகு சாதனை!
இன்று நிட்டம்புவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு மாகாண மட்ட கபடிப் போட்டியில், முதன்முறையாக எமது பாடசாலை மாணவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மொத்தம் 17 பாடசாலைகளுடன் போட்டியிட்டு, சிறப்பான திறமையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தி இவ்வெற்றியைப் பெற்ற எமது மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வெற்றிக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடனும் திறம்படவும் வழிநடாத்திய பொறுப்பாசிரியர், பயிற்றுவிப்பாளர் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்த ஆண்டில் நடைபெற்ற மாகாணமட்ட போட்டிகளில், இரண்டு விளையாட்டுகளில் எமது பாடசாலை தேசிய மட்டத்திற்கு தெரிவுசெய்யப்படுள்ளது.
⭕ உடற்பயிற்சி போட்டி
⭕ கபடிப் போட்டி
Aerobic Gymnastics u18 trio
தேசிய மட்டப் போட்டியிலும் எமது மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்று எமது பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்க்க எமது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்! 🏆🎉👆
Related Posts
Primary Sports Meet 2026
Annual Sports Meet 2026
Search
Categories

